வத்தளை பிரதேச சபையின் வெலிசறை உப செயலகத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட கட்டிடத் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தபோதிலும், அந்த கட்டிடத்துக்கு அனுமதி வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, தொழில்நுட்ப அதிகாரி 50,000 ரூபாய் இலஞ்சம் கோரியதாக ராகமவில் நபரொருவர் முறைப்பாடு அளித்துள்ளார்.
முறைப்பாட்டுக்கமைய தொழில்நுட்ப அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் வத்தளை பிரதேச சபையின் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space