ஈழத்தமிழ்மக்களுக்காகத் தன் இன்னுயிரை ஈகம் செய்த ஈகைப் போராளி தமிழ்நாடு புலிய நல்லூரைச் சேர்ந்த க.முத்துக்குமாரின் 17 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு வியாழக்கிழமை (29.01.2026) யாழ்.கொக்குவிலிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மூத்த எழுத்தாளர் மு.ஈழத்தமிழ்மணி மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும்  கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.