கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A சித்திகளை பெற்ற மாணவன் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியை சேர்ந்த , யாழ். இந்துக்கல்லூரி மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் 3A பெறுபேறுகளை பெற்று , யாழ்.மாவட்ட மட்டத்தில் 24ஆவது இடத்தை பெற்ற மாணவன் திடீர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.