உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் சரிவு!
Ad Space
Ad Space
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களுக்கும் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளியான அறிவிப்புகளைத் தொடர்ந்தே இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பிரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.8 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 95.54 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அதேநேரம், டபிள்யூ.டி.ஐ வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.85 டொலர்களாகக் குறைந்துள்ளது.
இதேவேளை, மர்பன் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100.80 டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த காலங்களில் இலங்கை அதிகளவில் மர்பன் வகை மசகு எண்ணெயையே இறக்குமதி செய்துள்ளதால், இந்த விலை வீழ்ச்சி இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உற்பத்தி செய்யப்படும் இந்த மர்பன் வகை எண்ணெய் தூய்மையானது, இலகுவானது மற்றும் கந்தகத்தின் அளவு குறைவாகக் கொண்டது என்பதால், இதனை சுத்திகரிப்பது மிகவும் எளிதானது என்பது குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space