உலக அமைதிக்காக பிரார்த்தனை அவசியம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்
Ad Space
Ad Space
உலக அமைதிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம். ஒரு தனிநபரின் சுயநலத்தால் இன்று ஒட்டுமொத்த உலகும் வேதனையடைகிறது. முழு உலகையும் ஆள வேண்டும் என்ற ஆசையால் அந்த தனிநபர் அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளார். இந்த நபரின் மனதை மாற்றுமாறு நாம் அனைவரும் கடவுளிடம் பிரார்த்திப்போம். இந்த கடினமான மற்றும் மோசமான பாதையில் இருந்து அவரை விலக்குமாறு பிரார்த்திப்போம் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை வலியுறுத்தினார்.
கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியால் பேராலயத்தில் நடைபெற்ற அல்லேலூயா சனியன்று விசேட திருப்பலி ஆராதனை பிரசங்கத்தின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உலக அமைதிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம். ஒரு தனிநபரின் சுயநலத்தால் இன்று ஒட்டுமொத்த உலகும் வேதனையடைகிறது. மனிதக்குலம் பாதிக்கப்பட்டுள்ளது.
முழு உலகையும் ஆள வேண்டும் என்ற ஆசையால் அந்த தனிநபர் அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளார்.இந்த நபரின் மனதை மாற்றுமாறு நாம் அனைவரும் கடவுளிடம் பிரார்த்திப்போம்.இந்த கடினமான மற்றும் மோசமான பாதையில் இருந்து அவரை விலக்குமாறு பிரார்த்திப்போம்.
கிறிஸ்தவ மதத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் இவ்வாறு செயற்படமாட்டார்கள். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவது பைபிளின் ஒருபகுதியை படிப்பதோ அல்லது அருட்தந்தையர்களை சூழ வைத்துக் கொண்டு உலகுக்கு கருத்து தெரிவிப்பதோ அல்ல,
அன்பை அனைவருக்கும் பகிர்வது, அயலவர்களையும் பாதுகாப்பது கடவுனை மன்றாடுவது உண்மையான கிறிஸ்தவரின் பண்பாகும். தலைவர்கள் சேவையாளர்களாக வேண்டும் என்று கிறிஸ்தவத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று உலகை ஆளும் தலைவர்கள், சேவையாளர்களாக செயற்படுபவதில்லை.இவர்கள் அதிகாரத்தின் பக்கமே செல்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். உலக அமைதிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
Ad Space
Ad Space