பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நோய் விடுப்பு அறிக்கை செய்து அனைத்துப் பொறுப்புகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டப்.ஏ.பி.ஏ.விஜேரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்த இரு நாட்கள் தொழிற்சங்க நடவடிக்கையின் போது தங்களது தொழில்சார் கோரிகளுக்கு அதிகாரிகளிடமிருந்து நியாயமான தீர்வு அல்லது சாதகமான பதில்கள் கிடைக்கப்பெறாவிடின் இந்த தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராம உத்தியோகத்தர்கள் சேவைக்கு பொருத்தமானதும், குறைபாடுகள் அற்றதுமான சேவை, சேவைக்கான எரிபொருள், அலுவலகப் பராமரிப்பு, மற்றும் நாளாந்த கொடுப்பனவுகள் தொடர்பாக சில தரப்பு குழுவினரால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல். அத்துடன் பணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட காலத்திலிருந்தே கடும் அநீதிக்கு உள்ளாகியுள்ள 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டின் பிரிவினரின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுகொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
தங்களது நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசியல் அதிகாரிகளிடமும் நிர்வாக பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகளிடமும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த போதிலும் இதுவரை எந்தவொரு கோரிக்கைக்கும் தீர்வு வழங்கப்படாததன் காரணமாகவே அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய இத்தகைய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிட்டுள்ளது என்றார்.
எதிர்வரும் 10, 11 திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட கிராம உத்தியோகத்தர் தீர்மானம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space