பேருந்து கட்டணங்களைத் திருத்தி அமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைமுறைப்படுத்தப்படும் என தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கு தேவையான கணக்கீடுகள் தற்போது நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் பல தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், அச் சந்தர்ப்பங்களில் பஸ் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், குறைந்தபட்சம் 15 சதவீதம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தடன், நேற்று சனிக்கிழமை (21) நள்ளிரவு முதல் டீசல் விலை 31 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.