எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்தியாவின் தமிழக மீனவர்கள் புதன்கிழமை (18.02.2026) இரவு யாழ் நெடுந்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 12 இந்தியாவின் தமிழகம் இராமேஸ்வரம் மீனவர்களும் மீன்பிடிக்குப் பயன்படுத்திய இரண்டு படகுகளுடன் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் நேற்றையதினம் 12 இந்திய மீனவர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இந் நிலையில் மீனவர்களை அடுத்த மாதம்-04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.