எஹெலியகொட, பாவில பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து 41 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (04) மீட்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.