நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி எஹெலியகொடை பகுதியில் பதிவாகியுள்ளது. அதன்படி 171 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட கடமையில் உள்ள வானிலை அதிகாரி மலித் பெர்னாண்டோ, கட்டுகஸ்தொட்டை பகுதியில் 120 மில்லிமீற்றர் மழையும், சபரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (22) பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இன்று மாத்தறை முதல் முல்லைத்தீவு வரையான கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் கடற்றொழிலாளர்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி - பல்லேகல மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி குறித்தும் வானிலை அவதானிப்புகள் வெளியாகியுள்ளன. இன்று பிற்பகல் வேளையில் கண்டி பகுதியில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதால், போட்டித் தடைப்பட வாய்ப்புள்ளதாக வானிலை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
எஹெலியகொடையில் 171 மி.மீ மழை: இன்றும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space