ஒழுங்கமைக்கப்பட்ட தரப்பினரால் தோற்றுவிக்கப்பட்ட எதிர்ப்புக்கள் மற்றும் அழுத்தங்களினால் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிச் மாணவர் அமைப்புக்கள் நிச்சயிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உரையை இரத்துச் செய்தமை கவலைக்குரியதொரு விடயமாகும்.இவ்வாறான தொடர்பு மற்றும் வாய்ப்பை இரத்துச் செய்வது ஜனநாயகத்தை பலப்படுத்தாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்கள் விவாதிக்கும் களமே தவிர, அச்சுறுத்தல் விடுக்கும் களமல்ல, அச்சுறுத்தலை விட உரையாடலே கருத்து பரிமாற்றத்துக்கு சிறந்த களமாக அமையும். எதிர்காலத்தில் பேசுபொருளாக உள்ள விடயங்கள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு மாணவர் அமைப்பில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்பு மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆற்றவிருந்த உரையை ஒக்ஸ்போர்ட் மாணவர் அமைப்பு இரத்துச் செய்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிச் மாணவர் அமைப்புக்கள் இவ்வாறு நிகழ்ச்சி நிரலை இரத்துச் செய்தமைக்கு கவலை தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிச் சங்கம் பாரம்பரியமாக பரம்பரை அடிப்படையில் சுதந்திரமாக விசாரணைகள்,விவாதங்கள் மற்றும் வெளிப்படையான கருத்தாடல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது.இந்த மாணவர் சங்கங்களில் உரையாற்றுவதற்கு எனக்கு விடுத்த அழைப்பை நிபந்தனையற்ற வகையில் ஏற்றுக்கொண்டேன்.
ஒழுங்கமைக்கப்பட்ட தரப்பினரால் தோற்றுவிக்கப்பட்ட எதிர்ப்புக்கள் மற்றும் அழுத்தங்களினால் நிச்சயிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உரை இரத்துச் செய்யப்பட்டமை கவலைக்குரியதொரு விடயமாகும்.தடையேற்படுத்தல் மற்றும் அச்சமூட்டுவதை காட்டிலும் கலந்துரையாடல் ஊடாக கருத்துக்களை பரிமாற்றிக்கொள்வது சமூகத்துக்கு முன்வைக்கும் பிரதான விடயங்களாக அமையும்.
வெளிப்படையான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்து பரிமாற்றம் ஊடாகவே அர்த்தமுள்ள நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.எனது கருத்துக்களுக்கு கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தும் நபர்கள் மற்றும் தரப்பினர்களுடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கு கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்.இவ்வாறான தொடர்பு மற்றும் வாய்ப்பை இரத்துச் செய்வது ஜனநாயகத்தை பலப்படுத்தாது.எதிர்காலத்தில் பேசுபொருளாக உள்ள விடயங்கள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு மாணவர் அமைப்பில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என பதிவேற்றம் செய்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் நிகழ்ச்சியில் தனது உரையை இரத்துச் செய்தமை ஜனநாயகத்திற்கு பாதகம் – நாமல் ராஜபக்ஷ
Ad Space
Ad Space
Ad Space
Ad Space