சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் பொறி வைத்து மான்கள் வேட்டையாடப்படுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, வேட்டையாடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு மான்களுடன் சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர்.