கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்
Ad Space
Ad Space
கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு பயணம் மேற்கொண்ட அதிவேகப் கப்பலின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் "போதைப்பொருள் கடத்தல்காரர்கள்" எனக் கருதப்படும் 4 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவு (SOUTHCOM) சனிக்கிழமை (19) வெளியிட்ட அறிவிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் SOUTHCOM இட்ட பதிவில், இந்தத் தாக்குதல் தமது வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டதாகவும், அந்தக் கப்பல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தமை உளவுத்துறையின் மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.“செப்டம்பர் 19 அன்று, SOUTHCOM வழிகாட்டுதலின் கீழ், மேற்கு அரைக்கோளத்திற்கான கூட்டுப் பணிக்குழு கரீபியன் கடலில் வழக்கமான போதைப்பொருள் கடத்தல் பாதைகளில் இயங்கி வந்த அதிவேக கப்பல் மீது தீவிரமான வான்வழியாக துல்லியமான தாக்குதலில் ஈடுபட்டது" என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், "இந்த நடவடிக்கையில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space