களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று சனிக்கிழமை (07) இரவு மேற்கொள்ளப்பட்டதாவும், அது தோல்வியடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான பந்துல பிரசன்ன என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இவரை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, பிஸ்டல்களுக்குப் பயன்படுத்தப்படும் உயிருள்ள தோட்டா ஒன்றும், கைப்பேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறையில் ஐ.ம.ச வேட்பாளரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space