கொழும்பு, காசல் வீதி மகப்பேற்று வைத்தியசாலையில் குழந்தைகளுக்குப் பால்மாற்று அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானவை என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு விடுத்துள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
"எமது வைத்தியசாலையில் குழந்தைகளின் பால் மாற்றும் எந்தவொரு சிகிச்சையோ அல்லது அறுவைசிகிச்சையோ செய்யப்படுவதில்லை என்பதைப் பணிப்பாளர் என்ற ரீதியில் நான் முழுப் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் போலியானவை. மேலும், இவ்விடயம் தொடர்பாக ஏதேனும் விசாரணைகளை முன்னெடுக்கத் தேவையேற்படின், அதற்கு வைத்தியசாலை நிர்வாகம் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது. எனவே, இந்தத் தவறான செய்தியை உடனடியாகத் திருத்தி, உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.