நாட்டில் அதிகூடிய மழை வீழ்ச்சி கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைவாக, நேற்று வியாழக்கிழமை (21) காலை 8.30 மணி முதல் இன்று வெள்ளிக்கிழமை (22) அதிகாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 244 மில்லி மீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொடை பகுதியில் 238 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பகுதியில் 230 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.