விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு தொடர்பில் இன்று (29) செவ்வாய்க்கிழமை காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், நாமல் ராஜபக்‌ஷ  4 ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியில் உள்ள பெறுமதிமிக்க காணியை இந்திய ‘கிரிஷ் டிரான்ஸ்வொர்க்ஸ்’ நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியதில் இடம்பெற்ற நிதி மோசடிகள் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவ்வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த விசேட மனுவை அடுத்து, நாமல் ராஜபக்‌ஷ இந்த வழக்கின் 4 ஆவது சந்தேகநபராக உத்தியோகபூர்வமாகச் சேர்க்கப்பட்டார்.