கிளிநொச்சி கணேசபுரத்தைச் சேர்ந்த 23 வயதான லோபிதன் என்ற இளைஞன் இன்று புதன்கிழமை (28.10.2026) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (27.10.2026) கிளிநொச்சி இராமநாதபுரத்தில் 31 வயதான இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த இரு சம்பவங்களும் அந்தந்தப் பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.