வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா மகா சிவராத்திரி நன்னாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (15.02.2026) சிறப்பாக இடம்பெறவுள்ளது.

வசந்தமண்டபப் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து  முற்பகல்-10 மணியளவில் முத்தேர்களில் முத் தெய்வங்களும் ஆரோகணிப்பர். அதனைத் தொடர்ந்து முத்தேர்களின் பவனி ஆரம்பமாகும். இன்று மாலை-03 மணியளவில் முத்தேர்களிலிருந்து முத் தெய்வங்களின் அவரோகணமும் தொடர்ந்து பிராயச்சித்த அபிஷேகமும் இடம்பெறும்.