கட்டுநாயக்கவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 'குஷ்' போதைப்பொருளுடன் இந்திய பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இந்திய நாட்டைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை (02) காலை 11.00 மணியளவில் பாங்காக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 403 மூலம் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
சந்தேக நபரின் பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 மில்லியனுக்கும் அதிக மதிப்புடைய 3,419 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருளை கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்,விசாரணைகளுக்காக, இந்த விமான பயணி மற்றும் அவர் கொண்டுவந்த “குஷ்” போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.