பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமு ஆற்றில் விழுந்து மூழ்கிய சிறுவன் ஒருவன், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  (01) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுவன் பொகவந்தலாவை , லின்போர்ட் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 10 வயதுடையவர் ஆவார்.

குறித்த சிறுவன் தனது தாத்தாவுடன் புல் வெட்டுவதற்காகச் சென்ற வேளையிலேயே எதிர்பாராதவிதமாகக் கெசல்கமு ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும்,  இச்சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.