கொக்கட்டிச்சோலை கண்டியனாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
Ad Space
Ad Space
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (22) முற்றுகையிட்டுள்ளனர்.இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், 10 பேரல்களில் காணப்பட்ட கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸ் மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த இடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பியோடியதைத் தொடர்ந்து, அங்கிருந்த 10 பேரல் கோடாவை பொலிஸார் மீட்டு அழித்துள்ளனர்.மேலும், வெற்று பேரல்களும் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
Ad Space
Ad Space