களுத்துறை பிரதேசத்தில் இரண்டுமாடி கட்டிடம் ஒன்றின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவன் கொன்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யொவுன்கம, பயாகலை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன், இரண்டுமாடி கட்டிடம் ஒன்றின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது சீமெந்து போமுவதற்காக கொன்கிரீட் கலவை இயந்திரத்திற்கு அருகில் சென்றுள்ளார்.
இதன்போது குறித்த இளைஞன் கொன்கிரீட் கலவை இயந்திரத்துடன் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கொன்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி இளைஞன் பலி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space