கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்தை  பகுதியில்  டிசம்பர் 30 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்கள் வியாழக்கிழமை (15) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்தை பகுதிக்கு டிசம்பர் 30 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர்  வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்டவர் சிறுமி அல்ல சிறுமியின் தாய் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு 9 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் வசிக்கும் 27, 32 மற்றும் 35  வயதுடையவர்கள் ஆவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.