கட்டுநாயக்க மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரம்யதொட்டுபல பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கிழமை (15) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.சந்தேகநபர்களிடமிருந்து 3024 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 46 மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும், கொட்டுகொட மற்றும் மினுவங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கம்பஹா - கெஹெல்பத்தர பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (15) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 1780 லீற்றர் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கெஹெல்பத்தர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுநாயக்க மற்றும் கம்பஹாவில் பாரிய சுற்றிவளைப்பு: 4800 லீற்றருக்கும் அதிக கோடாவுடன் மூவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space