வாதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துப்பிட்டிய பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (30) மாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 1,134 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர், பொத்துப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வாதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.