மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடவில பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 1278 லீற்றர் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் 49 வயதுடையவர் எனவும் கோனபொல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மொரகஹஹேன பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கோடாவுடன் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space