தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு இராசபோசனம் எனும் கருப்பொருளில் முன்னெடுத்த சிறுதானியப் பொங்கல் விழா சனிக்கிழமை (31.01. 2026) மாலை சங்கானை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய முன்றலில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வாழ்வில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான உறியடி மற்றும் சிறார்களின் பல கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. கலை நிகழ்வுகளில் பங்கெடுத்த சிறார்கள் அனைவருக்கும் பரிசுப் பொருட்களும் கையளிக்கப்பட்டன.