களுத்துறை - வாத்துவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போல்கொட பகுதியில், சட்டவிரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபான உட்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று சனிக்கிழமை (14) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 112 லீற்றர் 500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 570 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் வாத்துவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வாத்துவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான் மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space