கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் அடியவர்களுக்கு் இலவச பழப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்று வியாழக்கிழமை (12.11.2026) மூன்றாவது நாளாக இடம்பெற்றது.  

இன்றைய தினம் பல வகையான பழங்கள் அடங்கிய மொத்தம் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான  பழப் பொதிகள் சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் வழங்கப்பட்டன.    

இதேவேளை, எதிர்வரும்-14 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினமும் மாலை வேளைகளில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து மேற்படி விரதம் அனுஷ்டிக்கும் அடியவர்களுக்குப் பழப் பொதிகள் வழங்கவும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.