சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர்ச் சொற்பொழிவும் உதவி வழங்கலும் வெள்ளிக்கிழமை (19.06.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் சைவப்புலவர் இரா.செல்வவடிவேல் பங்கேற்று மகாபாரதம் எனும் தலைப்பில் தொடர்ச் சொற்பொழிவு ஆற்றினார். நிகழ்வில் பொருளாதார நலிவுற்ற குடும்பமொன்றைச் சேர்ந்த யாழ்.உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தரம்-05 இல் கல்வி கற்கும் மாணவியொருவருக்கு 53 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.