இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, சபாநாயகருக்கு எதிராக, தாக்கல் செய்த முறைப்பாட்டை விசாரிக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அண்மையில் கூடிய இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம், குறித்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டதுடன், முறைப்பாடு தொடர்பில் அதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, இடைநீக்கம் செய்யப்பட்ட சமிந்த குலரத்னவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் பெறப்பட்ட குறித்த முறைப்பாட்டை ஆராய்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சபாநாயகருக்கு எதிராக சமிந்த குலரத்ன முறைப்பாடு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space