சமூக வானொலி நிலைய மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி நிதி
Ad Space
Ad Space
Ad Space
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் செயல்படும் சமூக வானொலி நிலைய மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மக்களவையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் செயல்படும் வானொலி நிகழ்ச்சிகளின் செயல்திறன், நிலையான நிதிசார் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மதிப்பீடு செய்கிறது.
நாட்டில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் உள்ள சமூக வானொலி நிலையங்களை வலுப்படுத்தும் வகையில், பல்வேறு முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் சமூக வானொலி நிலைய மேம்பாட்டுக்கான ஆதரவு திட்டத்தை மத்திய அரசின் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டு, 2026-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டு வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், இந்த வானொலி நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளம், கருவிகள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்வது, சூரியமின் உற்பத்தி அமைப்பை நிறுவுதல் ஆகியவற்றுக்காக இந்த நிதி செலவிடப்படும்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 சமூக வானொலி நிலையங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.52.59 லட்சம் நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், தருமபுரி சமூக வானொலி நிலையத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் அடங்கும்.
சமூக வானொலி நிலையங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் தொடர்பான அறிவிக்கையை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://mib.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து வானொலி நிலையங்களின் விவரங்கள் இந்த இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் இதனை தெரிவித்துள்ளார்.
Ad Space
Ad Space
Ad Space