சம்பள உயர்வு என்பது தற்காலிக நிவாரணம் சிறுதோட்ட உடமையாளராக்குவதே நிரந்தர தீர்வு என முன்னாள அமைச்சரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் கொட்டகலையில் இடம்பெற்ற மலையக வாழ்வுரிமை மாநாட்டில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

மலையக மக்களுக்கு உணர்வு பூர்வமாக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தமிழ் முற்போக்கு கூட்டணியே முன்னெடுத்துள்ளது.

கிடைத்த நான்கே ஆண்டு அரசாங்கத்தில் உட்கட்டமைப்பு, உரிமை சார் திட்டங்களை செய்துள்ளோம். ஆனால் எங்களைத்தார் விமர்சித்தார்கள்.

நான் வீடு கட்டும்பொது அது குருவி கூடு என்றார்கள். காணி பத்திரத்தை நான் வழங்கியபோது அது சட்ட ரீதியானது இல்லை என்றார்கள். எதிர்கட்சியிலிருந்து இந்த அரசாங்கமும் விமர்சித்தது.

ஆனால் இன்று ஆட்சிக்கு வந்து என்ன செய்துள்ளது. 2025 வரவு செலவு திட்டத்தின்போது அமைச்சர் சமந்த வித்தியாரத்ன 4000 இந்திய வீடுகளை நிறைவு செய்வதாக சொன்னார்கள் அது நடக்கவில்லை.

எங்களது காலத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் 4000 இலங்கை அரசங்க நிதியில் 4000 வீடுகளுக்கு அதிகமாக நிர்மாணித்து அதற்கான காணி உரிமைகளையும் வழங்கினோம்.
Beaches & Islands
கிளங்கன் வைத்தியசாலையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் நாங்கள் அரசாங்கத்தில் இருந்து இன்றைய அரசாங்கம் எதிர்கட்சியில் இருந்திருந்தால் எங்களையும் விமர்சித்திருப்பார்கள்.

ஆனால் இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன?  கிளங்கன் வைத்தியசாலை சம்பவம் தொடர்பில் நீதியான பக்கசார்பற்ற நடவடிக்கை அவசியம்.

பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தில் 200 ரூபா அரச நிதியை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கு முன்மொழிந்தபோதே நாங்கள் கூட்டணியாக வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்து ஆதரவாக வாக்களித்தோம்.

அதையும் விமர்சிக்க சில கூட்டம் உள்ளது. அரசாங்கம் வழங்கியுள்ள 200 ரூபா என்பது தற்காலிகமாக வழங்கியுள்ளது.

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சம்பள உயர்வு நடவடிக்கை அவசியம். இது தற்காலிக நிவாரணமே. நிரந்தர தீர்வாக சிறுதோட்ட உடமையாளர்களாக ஆக்குவதே நிரந்தர தீர்வாகும்.

அதனையே நாங்கள் முன்னெடுக்க இந்த அரசாங்கத்தையும் வலியுறுத்துகின்றோம். எங்களது காலத்தில் சஜித் பிரேமதாச காலத்தில் அதனை செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம் என்றார்.