அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனைப் பகுதியில் 28,500 மில்லி லீற்றர் (28.5 லீற்றர் ) கசிப்புடன் 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக் கமைய இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது, சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்புடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், மீட்கப்பட்ட கசிப்பு உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சந்தேக நபரைச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்மாந்துறையில் 28.5 லீட்டர் கசிப்புடன் இளைஞர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space