ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளின் தீர்ப்பை பிரகடனப்படுத்தி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதற்கமைய, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிக்கான தண்டனை விபரங்களை அறிவிப்பதற்கு முன்னர், அது தொடர்பான விடயங்களை முன்வைக்கும் பணிகளில் சட்டத்தரணிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

2006இல் அபிவிருத்தி லொத்தர் சபைத் தலைவராக இருந்தபோது, மூன்று வாகனங்களைக் குத்தகைக்குப் பெற்று மோசடியில் ஈடுபட்டு அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு  தாக்கல்  செய்திருந்த 4 வழக்குகளிலும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் தலா 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 18 இலட்சம் ரூபா அபராதமும் விதித்துத் இன்று (9)  தீர்ப்பளித்தார்.