மட்டக்களப்பு திராய்மடு, மற்றும் சுவிஸ் கிராமத்தில் 5 வருடத்துக்கு மேலாக இடம்பெற்று வந்த கசிப்பு மற்றும் போதைப் பொருள் விற்பனையை எங்கள் அமைப்பின் ஊடாக முற்று முழுதாக தடுத்து நிறுத்தியதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி; நாடாளுமன்றத்தை தவறான முறையில் வழிநடத்துகிறார். இவர் மற்றவர்கள் தீ மூட்டும் போது அதில் குளிர்காய்பவர் என மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக மாநாடு ஞாயிற்றுக்கிழமை (1) பாலமீன்மடுவில் இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பாராளுமன்றத்தில் திராய்மடு சுவிஸ் கிராமத்திலே தர்ஷன் என்பவர் கசிப்பு விற்பதாகவும் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். இந்த பிரதேசத்தில் பல ஆண்டு காலமாக தர்ஷன் என்பவர் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் எங்கள் அமைப்புக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் இருக்கும் ஒரு சில பொலிசார் கசிப்பு மற்றும் போதைப் பொருள் விற்பவர்களுக்கு உடந்தையாக இருந்ததையடுத்து கடந்த சர்வதேச மது ஒழிப்பு தினத்தில் மக்களை வீதிக்கு கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தை செய்தோம்.
அது மட்டுமல்ல அமைப்பின் ஊடாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எனது பெயரில் கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு எதிராக முறைப்பாடு செய்ததையடுத்து அவர் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை சந்திக்குமாறு தெரிவித்தமைக்கு அமைய அவரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தோம்.
அவர் உடனடியாக அவருக்கு கீழ் இயங்கும் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியுடன் எங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தியதுடன் அவர்களை வைத்து சட்டவிரோத கசிப்பு போதை பொருள் விற்பவர்களை தடுத்து நிறுத்துவதற்கு அவர்களுக்கு தகவல்களை வழங்குமாறு தெரிவித்ததுடன் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் கசிப்பு மற்றும் போதைப் பெருள் விற்பவர்களுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்தா இதற்கமைய நாங்கள் அந்த பகுதியில் கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவர்கள் தொடர்பாக மக்கள் வழங்கிய தகவல்களை வழங்கி கசிப்பு வியாபாரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தை அந்த பகுதியில் இருந்து முற்று முழுதாக நிறுத்தியுள்ளோம்.
அதன் பின்னர் இரா.சாணக்கியன் நடாளுமன்றத்தில் தர்ஷன் கசிப்பு விற்பதாகவும் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்த கசிப்பு வியாபாரம் கடந்த 5 வருடங்களாக இடம்பெற்று வருகிறது இங்கு கடந்த கால மாநகர சபை உறுப்பினர்களாக முதலாம் இரண்டாம் வட்டாரத்தில் தமிழரசுட்சியை பிரதிநிப்படுத்துபவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.
அவ்வாறே தற்போது இந்த இரு வட்டாரங்களில் மாநகர சபை உறுப்பினர்களாக தமிழரசு கட்சி சேர்ந்தவர்களே உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் குறித்த தர்ஷன் என்பவர் கொக்குவில் பொலிஸ் நிலைய ஒரு சில பொலிசாரின் அனுசரனையுடன் சட்டவிரோதமான கசிப்பு வியாபாரத்தில் 5 வருடங்களாக ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே அப்போது இது தொடர்பாக இரா.சாணக்கியன் பாராளுமன்றத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை அதை தடை செய்ய எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த கசிப்பு வியாபாரம் 5 வருடத்துக்கு மேலாக நடந்து வந்த போது இவ்வளவு காலமும் இதனை தடுத்து நிறுத்த தவறிய இரா.சாணக்கியன் எங்கள் அமைப்பின் ஊடாக இந்த சட்டவிரோத கசிப்பு போதை பொருள் வியாபாரிகளை நாங்கள் தடுத்து நிறுத்தியதன் பின்னர் அவர் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தவறான முறையில் நாடாளுமன்றத்தை வழிநடத்தி செல்கின்றார்.
இரா.சாணக்கியன் மற்றவர்கள் தீ மூட்டும் போது அதில் குளிர் காய்வார், மற்றும் மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து தனது சொந்த பணத்தில் கொடுப்பது போல் அபிவிருத்திளை செய்து அதில் வாக்கு வங்கிகளை தேடிக்கொள்ளும் இரண்டு வகையான அரசியலை செய்கின்றார்.
கடந்த காலத்தில் புத்தசான அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாச வடகிழக்கில் பல ஆயிரம் விகாரைகளை கட்டுவேன் என சபதம் எடுத்த அவர் அமைச்சராக இருக்கும் போது வடக்கு கிழக்கில் கட்டப்பட்ட விகாரைகள் தான் இன்று விகாரைகள் அமைக்கப்படுவதாக தமிழரசு கட்சியினர் அங்கும் இங்கும் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
எனவே அப்படியாயின் சஜித் பிரேமதாச புத்தசாசன அமைச்சராக இருக்கும் போது விகாரைகளை கட்டுவதற்கான திட்டங்கள் நிதிகளையும் ஓதுக்கியிருந்தார். அதன் பின்னர் அவர் ஜனாதிபதியாக போட்டியிடும் போது அவரின் மேடையில் ஏறி சஜித்துக்கு வாக்களிக்கும்படி மக்களிடத்தில் தமிழரசு கட்சி கோரிக்கையை முன்வைத்து.
சஜித் பிரேமதாச புத்தசாசன அமைச்சராக இருக்கும் போது வடகிழக்கில் பல விகாரைகளை கட்டினார் என்றால் ஜனாதிபதியாக வந்திருந்தால் வடகிழக்கில் எத்தனை ஆயிரம் விகாரைகளை கட்டியிருப்பார். அப்போது இவர்கள் என்ன செய்திருப்பார்கள் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பார்கள் வேலியில் போன ஓணானை பிடித்து பொக்கட்டுக்குள் விட்டுவிட்டு கடிக்குது குத்துது என சொல்வது போன்று தான் இந்த சாணக்கியனின் மற்றும் தமிழரசு கட்சியினுடைய வேலைப்பாடும் அவ்வாறுதான்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக இருந்த போது சின்னவத்தை விகாரைக்குள் கட்டிடம் கட்டும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்தவர் .இரா.சாணக்கியன் இன்று விகாரை கட்டுவதாக மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என சொல்லுகிறார் இந்த பிரச்சனைகளை யாரிடம் சொல்வது அவர் நேரத்துக்கு நேரம் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டு செல்வார் மக்களையும் அவ்வாறு மாற்ற முயற்சிக்கின்றார் ஆதலால் மக்கள் ஆகிய நீங்கள் சிந்தித்து செயல்படுங்கள்.;
அதேவேளை இரா.சாணக்கியனிடம் கோரிக்கையை முன்வைக்கின்றோம் இந்த கசிப்பு தேற்றாத்தீவு, மாங்காடு, குருக்கள்மடம், வவுணதீவு நாவற்காடு, விளாவெட்டுவான், மகிழவெட்டுவான், ஈச்சந்தீவு, கொக்கட்டிச்சோலை, மதலையடிகுடா, முனைக்காடு, கரையாக்கன்தீவு, கன்னங்குடா, போன்ற அவருடைய தொகுதியில் தான் உற்பத்தி செய்யப்பட்டு மட்டக்களப்பு நகருக்குள் வருகிறது
எனவே உற்பத்தி செய்யப்படும் உங்கள் தொகுதியில் அதை நிறுத்தினால் நகருக்குள் கசிப்பு வராது ஆகவே உங்களுடைய தொகுதியில் இருக்கும் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் கூறி அந்த உற்பத்தி நிலையங்களை தடுத்து நிறுத்துங்கள், என கோரிக்கை விடுத்துள்ளார்.