முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும் வழிபாடும் சனிக்கிழமை (28.02.2026) காலை-09 மணி முதல் முற்பகல்-11 மணி வரை வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தின் பின்புறமாக இந்து மயானத்திலுள்ள சாந்தன் துயிலாலயத்தில் நடைபெறவுள்ளது.