யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடச் சைவசித்தாந்தத் துறையும், உயர் பட்டப் படிப்புகள் பீடமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதலாவது சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு-2026 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமையும் (27.02.2026),   சனிக்கிழமையும் (28.02.2026) இடம்பெறும்.
 வெள்ளிக்கிழமை   காலை-09 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கூவர் கலையரங்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப் படிப்புகள் பீடப் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் ஆரம்பமாகும் மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
இதேவேளை, சைவசித்தாந்த ஆய்வு மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்   சனிக்கிழமை (28.02.2026) காலை-08.30 மணியளவில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  உயர் பட்டப்படிப்புகள் பீட மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெறும்.