செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த சனிக்கிழமை (07.03.2026) முற்பகல்-10.15 மணியளவில் யாழ்ப்பாணம் கலட்டியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் நிறுவனத் தலைவர் கெ.பிரகாஸ் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது..
மேற்படி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஜயகுமார் சியாமளா தம்பதிகள் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும், யாழ்.மாவட்டச் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.வரதபாஸ்கரன், யாழ். மாவட்டச் சமூக சேவைகள் திணைக்கள இணைப்பாளர் தி.உமாசங்கர், நல்லூர்ப் பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.தர்மினி ரஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும்,
நல்லூர்ப் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.சிவதர்ஷினி பாலசுப்பிரமணியம், நல்லூர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சுப்பிரமணியம் சுகுமாரன்,
வண்ணார்பண்ணை வடகிழக்குக் கிராம அலுவலர் திருமதி.ரேணுகா நகுலன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
சிறப்பாக இடம்பெற்ற செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் ஆண்டு நிறைவு விழா
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space