தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள முதியோர் இல்லமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சிலியின் அரோகெனியா மாகாணத்தில் உள்ள பிட்ருப்கியூன் நகரில் குறித்த முதியோர் இல்லம் அமைந்துள்ளது. அந்த முதியோர் இல்லத்தில் 26 வயோதிபர்கள் தங்கி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (11) இரவு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இல்லத்தில் உள்ள அனைத்து அறைகளுக்கும் தீ வேகமாக பரவியதில் பலர் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். எனினும், 16 பேர் தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும் ஏனைய 10 பேரும் காயங்களுடன் உயிர் பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீ பரவியபோது மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டதில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக  குறிப்பிடப்படுகிறது.