லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட கங்கை ஆரத்தி விழா
Ad Space
Ad Space
Ad Space
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற தேம்ஸ் நதிக்கரையில், இந்திய பாரம்பரியத்தின் அடையாளமான கங்கை ஆரத்தி விழா முதன்முறையாக மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்தியாவில் கங்கை நதிக்கரையில் நடத்தப்படும் புகழ்பெற்ற ஆரத்தியை நினைவூட்டும் வகையில் அமைந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மகிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சின்மயா மிஷன் அமைப்பின் 75வது ஆண்டு உலகளாவிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்த ஆரத்தி விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.புகழ்பெற்ற ஓல்ட் ரோயல் நேவல் கல்லூரிக் கட்டடத்தின் பின்னணியில் நடைபெற்ற இந்த ஆரத்தி விழாவில், தேம்ஸ் நதியின் தூய்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Ad Space
Ad Space
Ad Space