அறமும் அறமும் ஆன்மீகமுமே தனது வாழ்வின் உயிா் மூச்சு என்ற உயாிய சிந்தனையை மனதில் இருந்தி,எண்ணற்ற மனித உயிா்களின் வாழ்விற்கு உறுதுணையாகவும் நல்ல வழிகாட்டியாகவும் வாழ்ந்த சிவத்தமிழ்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவா்களது 101வது பிறந்தநாள் அறக்கொடை விழா, இன்று 07.01.2026ம் திகதி புதன்கிழமை தேவஸ்தானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பெருமை மிக்க இவ் விழாவில் சமூகத்திற்கும் சமயத்திற்கும் தொண்டாற்றியவா்களை, கௌரவித்து சிவத்தமிழ் விருது வழங்கி கௌரவிக்கப்படுது வழமையான ஒன்றாகும். அந்தவகையில் 2026ம் ஆண்டு, வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் கலாநிதி சமாதிலிங்கம் சத்தியசீலன், மிருதங்க வித்துவான் மாரிமுத்து. சிதம்பரநாதன்,இளைப்பாறிய அதிபர் திருமதி.ஆனந்தி சிவஞானசுந்தரம், இளைப்பாறிய கூட்டுறவு மாவட்ட உதவி ஆணையாளர் திரு.எல்லுப்போலை.சின்னத்தம்பி, தவில் வித்துவான். சுருளிச்சாமி இராமதாஸ் ஆகியோா் சிவத்தமிழ்செல்வி அறநிதியத் சபை சாா்பில்,மிக உயாிய விருதாக கருதப்படும் சிவத்தமிழ் விருது வழங்கி கெளரவிக்கப்படார்கள்.