இளம்பெண்ணொருவர் அமெரிக்காவின் Dallas விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸ் குடிமகளான 23 வயதுடைய பெண்ணொருவர், அமெரிக்காவின் Dallas விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சூரிக்கைச் சேர்ந்த அந்தப் பெண், 2023ஆம் ஆண்டு, ஒரு குடும்பத்திலுள்ள குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். 

2025ஆம் ஆண்டு, அவருக்கு அமெரிக்கக் குடிமகன் ஒருவருடன் திருமணமாகியுள்ளது. திருமணத்துக்குப் பின், அவர் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதற்கிடையில், அவரது தற்காலிக குடியிருப்பு அனுமதி சமீபத்தில் காலாவதியாகியுள்ளது.