செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவர், தீர்வை வரி செலுத்தப்படாத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, செவ்வாய்க்கிழமை 12 ஆம் திகதி இரவு மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் 54 வயதுடைய சீன பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் செல்லுபடியாகும் விசா உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இன்றி இந்நாட்டில் தங்கியிருந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்தோடு, இவரிடமிருந்து தீர்வை வரி செலுத்தப்படாத 1,200 வெளிநாட்டு சிகரெட்டுகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.