சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கப்பல் கடத்தல்!
Ad Space
Ad Space
சோமாலிய கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் போக்குவரத்து கப்பலில் பணிபுரிந்த 17 ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களில் இலங்கையர் 01, பாக்கிஸ்தானியர்கள் - 10, இந்தோனேசியர்கள் - 04, இந்தியர் - 01, மியான்மார் பிரஜை - 01 என கடத்தப்பட்ட கப்பலில் மொத்தம் 17 ஊழியர்கள் பணியாற்றியுள்ளனர்.
சுமார் 18,500 எரிபொருள் பீப்பாய்களை ஏற்றிச் சென்ற குறித்த கப்பல், கடந்த புதன்கிழமை இரவு சோமாலிய கடற்கரையிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஆயுதமேந்திய கும்பலால் கடத்தப்பட்டுள்ளது.
தற்போது கப்பலும் அதன் 17 ஊழியர்களும் கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் சோமாலிய கடற்கரைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து சோமாலிய அதிகாரிகளோ அல்லது அந்த கடல் பிராந்தியத்தில் கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஐரோப்பிய கடற்படையினரோ இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
இதேவேளை, இச்சம்பவம் குறித்து மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space