பொலன்னறுவை - சோமாவதிய, சுங்காவில வீதி நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பொலன்னறுவை மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை காலை 9.15 நிலவரப்படி, சுங்காவிலவிலிருந்து சோமாவதிய புனித தலத்திற்குச் செல்லும் வீதியில் சுமார் ஒரு அடி நீரில் மூழ்கியுள்ளது.
இதனால், குறித்த வீதியினூடாக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சோமாவதிய புனித தலத்திற்கான வீதி நீரில் மூழ்கியது: வாகனப் போக்குவரத்துக்குத் தடை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space