கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொய்சாபுர பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (20) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்கிஸ்ஸ பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் கடத்தலில் இருந்து சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 44,000 ரூபாய் பணம் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்கிஸ்ஸ காவல் துறை பிரிவில் போதைப்பொருள் வேட்டை - 44,000 ரூபா பணமும் கைப்பற்றல்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space