சோமாவதி - சுங்காவில பிரதான வீதி தொடர்ந்தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால், குறித்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக, குறித்த வீதியின் திக்கல பகுதியில் 35 முதல் 37 கிலோ மீற்றர் வரையான பகுதி சுமார் 2 அரை அடி உயரத்தில் நீரில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக, சோமாவதி - சுங்காவில வீதியூடாக வரலாற்று சிறப்பு மிக்க பொலொன்னறுவை சோமாவதி விகாரைக்கு செல்லவிருக்கும் பக்தர்கள், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சோமாவதி - சுங்காவில பிரதான வீதி நீரில் மூழ்கியது: போக்குவரத்து இடைநிறுத்தம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space