ஜிந்துப்பிட்டி ‘125 வத்தை’ பகுதியில் வெள்ளிக்கிழமை (16) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது சிறுவன் ஒருவன் மற்றும் சிறுமி ஒருவரும் காயமடைந்து கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் வந்த குழுவினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியபின் தப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது